மேடையில் இன்னொரு தொகுப்பாளினியை வம்புக்கு இழுத்த கூல் சுரேஷ்..

Gossip Today Cool Suresh
By Edward Aug 10, 2024 01:30 PM GMT
Report

நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா என்ற படத்தின் டிரைலர் மற்றும் ஆடையோ லான்ச் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்துள்ளது. நிகழ்ச்சிக்கு சத்யராஜ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன் மற்றும் படத்தில் நடித்துள்ள கூல் சுரேஷ் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

மேடையில் இன்னொரு தொகுப்பாளினியை வம்புக்கு இழுத்த கூல் சுரேஷ்.. | Cool Suresh About Host Invite Just Name Viral

மேடையில் பேச அழைத்த தொகுப்பாளினி எத்தனையோ படங்களின் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்திருக்கிறோம், அப்படி படம் பார்த்து முடிந்ததும் இவர் என்ன சொல்வார் என்று படக்குழுவினர் காத்திருக்கும் கூல் சுரேஷ் அவர்களை பேச அழைக்கிறோம் என்று கூறி வரவேற்றார்.

அதன் பின் பேச வந்த கூல் சுரேஷ், தொகுப்பாளியிடம், உங்கள் பெயர் என்ன என்று கேட்டுத்தெரிந்து கொண்டு, நீங்கள் கூல் சுரேஷ் அவர்கள் பேசுவார்கள் என்று சாதாரணமாக கூறிவிட்டீர்கள்.

மேடையில் இன்னொரு தொகுப்பாளினியை வம்புக்கு இழுத்த கூல் சுரேஷ்.. | Cool Suresh About Host Invite Just Name Viral

அடுத்தமுறை கூப்பிடும்போது என்னை யூடியூப் சூப்பர் ஸ்டார், வெள்ளிழமை நாயகன், சிஎஸ்கே கட்சியின் தலைவர், கூல் சுரேஷ் கட்சியின் தலைவர், நடிகருமாகிய கூல் சுரேஷ் அவர்களை பேச அழைக்கிறோம் என்று சொல்லி கூப்பிடுங்கள்.

எதற்கு சொல்கிறேன் என்றால் மேடையில் பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள் அதனால் என்று கூல் சுரேஷ் கூறியிருக்கிறார். ஏற்கனவே தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிற்கு மாலை அணிவித்து சர்ச்சைக்குள்ளானதை அடுத்து இந்த தொகுப்பாளினியிடம் இப்படி நடந்து கொண்டதை சிலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.