வசூல் மன்னன் என்றால் அது ரஜினி தான்.. கூலி ப்ரீ புக்கிங் கலெக்ஷன்
வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கூலி படம் திரையரங்கில் வெளிவரவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், உலகளவில் ப்ரீ புக்கிங் களைகட்டி வருகிறது.
முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கில் வசூல் குவியும், அதுவும் ரஜினியின் படம் என்றால் சொல்லவா வேண்டும். கடந்த வாரத்திற்கு முன்பே இப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கிவிட்டது.
நேற்றில் இருந்து தமிழகத்திலும் துவங்கியுள்ளது. இந்நிலையில், இதுவரை உலகளவில் நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 40 கோடிக்கும் மேல் வசூலை எட்டியுள்ளது கூலி. கண்டிப்பாக ரிலீசுக்கு முன் வசூல் மாபெரும் சாதனைகளை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி படமாகவும் கூலி அமையும் என திரையுலகினர் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.