2013-லேயே கொரோனா வைரஸ் இருந்ததா! 8 வருடத்திற்கு முன்பே கூறிய நபர்..
உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது இந்த கொரானா வைரஸ். 2019ல் இறுதியில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் இரண்டாம் அலையை தாண்டும் தருவாயில் உள்ளது.
தினசரி பாதிப்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல் உள்ளது வைரஸை தடுக்கும் பணியில் அனைத்து மாநிலங்களும் முழு ஊரடங்களை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை அறிவித்தது. கொரானா வைரஸ் பற்றி பல தகவல்கள் வெளியாவதை பார்த்திருப்போம்.
இந்நிலையில் , கொரோனா வைரஸ் பற்றி ஒரு நபர் 2013ல் டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 8 வருடங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் வரப்போகிறது என்று கூறப்பட்டதை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Corona virus....its coming
— Marco (@Marco_Acortes) June 3, 2013