வீட்டு லோன் கட்ட காசு இல்லை.. அதுக்காக படத்துல நடிச்சேன்!! நடிகை பிரியா ஆனந்த் ஓப்பன் டாக்..
Prashanth
Priya Anand
Tamil Actress
Actress
By Jai
நடிகர் ஜெய் நடிப்பில் 2009ல் வெளியான வாமணன் படத்தில் கதாநாயகியாகி பிரபலமான நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்த பிரியா ஆனந்த் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அந்தகன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் பிரியா ஆனந்த், சமீபத்திய பேட்டியொன்றில், காசுக்காக வேற வேலை ஏதும் பார்த்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதைவிட காசு எங்கு அதிகமாக தருகிறார்கள். காசுக்காகவே ஒரு படத்தில் நடித்தேன். அந்நேரத்தில் வீட்டுக்காக வாங்கிய லோன் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்து அதனாலேயே கதை எதுவும் கேட்காமல் ஒரு படத்தில் நடித்தேன் என்று பிரியா ஆனந்த் ஓப்பனாக பேசியிருக்கிறார்.