என்னது தவெக மாநாட்டில் த்ரிஷா - கீர்த்தி சுரேஷ் கட் அவுட்-ஆ!! வைரலாகும் புகைப்படங்கள்..

Vijay Keerthy Suresh Trisha Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Oct 26, 2024 08:45 AM GMT
Report

தவெக மாநாடு

நடிகர் விஜய் நடிப்பை தவிர்த்துவிட்டு கடைசி படத்தோடு சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கான முழு பணிகளில் ஈடுபடவுள்ளார்.

என்னது தவெக மாநாட்டில் த்ரிஷா - கீர்த்தி சுரேஷ் கட் அவுட்-ஆ!! வைரலாகும் புகைப்படங்கள்.. | Cutouts Keerthy Suresh Trisha In Tvk Conference

அதற்காக விக்கிரவாண்டியில் வி. சாலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை திட்டமிட்டுள்ளார். நாளை அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவுள்ள இந்த மாநாட்டிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் அஜித் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று ஆதரவை அளித்து வருகிறார்கள்.

என்னது தவெக மாநாட்டில் த்ரிஷா - கீர்த்தி சுரேஷ் கட் அவுட்-ஆ!! வைரலாகும் புகைப்படங்கள்.. | Cutouts Keerthy Suresh Trisha In Tvk Conference

த்ரிஷா - கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் விஜய்யின் ஹேட்டர்ஸ்கள் இணையத்தில் தவறான கருத்துக்களை கூறியும் வருவதுண்டு. அந்தவகையில் பல தலைவர்களின் புகைப்படங்கள் மாநாடு நடக்கும் இடத்தில் கட்டவுட் ஆக தவெக கட்சியின் வைத்துள்ளனர்.

அதில் நடிகை திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் கட் அவுட்களை வைத்து எடிட் செய்த புகைப்படங்களை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள். அதிலும் சின்னம்மா த்ரிஷா, பெருந்தலைவி அம்மா என்றும் அந்த கட் அவுட்டில் எழுதியிருக்கிறார்கள்.

GalleryGalleryGallery