குக் வித் கோமாளி 6!! பிரியா ராமனுக்கு சம்பளமே வேஸ்ட், பேசாம வீட்டுக்கு அனுப்புங்க!! ராஜு ஷாக்கிங் ஸ்பீச்..
குக் வித் கோமாளி 6
குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது விறுவிறுப்பாகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. செஃப் தாமி, கவுசிக் சங்கர், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடிகர்வர்களாக இருந்து வருகிறார்கள்.
புகழ், சரத், ராமர், சுனிதா, சவுந்தர்யா, சர்ஜின், பூவையார், தங்கதுரை, குரேஷி, டோலி ஆகிய 10 கோமாளிகளுடனும் துமிதா, ஷபானா ஷாஜகான், பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப், சவுந்தர்யா சில்லுக்குரி, ராஜு ஜெயமோகன், கஞ்சா, சுந்தரி அக்கா, நந்தகுமார் போட்டியாளர்களுடனும் குக் வித் கோமாளி சீசன் 6 நடந்து வருகிறது.
கடந்த இரு வாரங்களாக பிரியா ராமன் செஃப் ஆஃப் தி வீக் பெற்று வருகிறார். கோல்டன் ஏப்ரான் தற்போது அவரிடம் தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் குக்குகளும் கோமாளிகளும் பேரிங் செய்யும் முறை நடந்தது.
ராஜுமோகன் - பிரியா ராமன்
அப்போது போட்டியாளர் ராஜுமோகன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரே மாதிரியாக சமைப்பதாக தெரிவித்தார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், அடேய் உன்னை அடிக்கபோறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பிரியா ராமன் குறித்து பேசுகையில், இவங்க இந்த நிகழ்ச்சியில் எதற்கு, இவர்தான் டாப்ல இருக்கிறார். பேசாமல் இவரிடமே குக் வித் கோமாளி கோப்பையை கொடுத்துவிடலாம். இவர்தான் ஜெயிக்க போக்றார், இதற்கு இவருக்கு எதற்கு வீணாக ஊதியம் தரவேண்டும் என்று காமெடியாக கூறியிருக்கிறார் ராஜு ஜெயமோகன்.