டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3!! பஞ்சமிக்கு சூரி கொடுத்த வாக்கு!! உருகிய நடுவர்கள்..
டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது இந்நிகழ்ச்சியில் சீசன் 3 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நடிகை சினேகா, வரலட்சுமி, பாபா மாஸ்டர் நடுவர்களாக இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் மாமன் பட பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அப்போது சிறப்பாக நடனமாடிய பஞ்சமியை பாராட்டி சூரி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளார்.
பஞ்சமிக்கு சூரி கொடுத்த வாக்கு
அதாவது, பஞ்சமியின் 3 குழந்தைகளுக்கு இன்னும் காது குத்தாததை கேட்ட சூரி, நான் மாமன் பட பிரமோஷனுக்காகத்தான் இங்கே வந்தேன். நான் படத்தின் பிரமோஷனுக்காக வந்ததையே இந்நிகழ்ச்சி மறக்கடித்துவிட்டது.
மாமன் பட டைட்டில் என்பதால், எல்லாத்துக்கும் மாமன் நான் இருக்கேன். ஒரு தாய் மாமனாக உன் பிள்ளைகளுக்கு நான் காது குத்துகுறேன், என் முன்னாடி தான் காது குத்தனும், நான் பார்த்துக்கிறேன் என்று சூரி கூறியிருக்கிறார்.
காலில் விழப்போன பஞ்சமியிடம் பெண்கள் யார் காலிலும் விழக்கூடாது என்று உருக்கமாக பேசி அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார்.