ரஜினியின் ஒட்டுமொத்த மார்க்கெட்டை முடித்து வைக்கும் மகள்கள்!! டார்க்கெட் செய்யும் செளந்தர்யா..
70 வயதை தாண்டியும் சினிமா வாழ்க்கையில் தனக்கான மார்க்கெட்டை உருவாகி தக்கவைத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெடியாகி வருகிறார். ஆனால் இப்போது ரஜினிகாந்த் சற்று செம அப்டெட்டில் இருக்கிறாராம்.
அதாவது சமீபத்தில் தன் மூத்த மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தது தானாம். படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை கொடுத்ததோடு, லால் சலாம் படத்தால் ரஜினியின் மார்க்கெட்டையே அப்படியே கிளோஸ் ஆகியிருக்கிறது.
இந்நிலையில் அவரது இரண்டாம் மகள் செளந்தர்யாவும் இந்த போட்டிக்கு இறங்கி இருக்கிறார். தான் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க அப்பாவிடம் கேட்க ரஜினியும் சம்மதம் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே, செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்து படு பிளாப்பை சந்தித்தார். தற்போது மீண்டும் தன் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா இருவரும் ரஜினியின் மார்க்கெட்டை மாறி மாறி குறைத்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.