டிடி சகோதரர் திருமண நிகழ்ச்சி!! ஓடோடி வந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்..
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி டாப் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் தான் விஜே திவ்யதர்ஷினி என்கிற டிடி. 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் டிடி.
காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அதிக நேரம் நிற்காமல் அவதியுற்று வருகிறார் டிடி. தற்போது படங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் யூடியூப் சேனல் ஆரம்பித்து பாட்காஸ்ட் செய்து வருகிறார்.

டிடி சகோதரர்
டிடியின் சகோதரர் தர்ஷன், கிர்கிஸ்தானை சேர்ந்த அஜர் என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். சகோதரரின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து புது தம்பதிகளை வாழ்த்துங்கள் என்று கூறி ஒரு பதிவினை போட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது டிடியின் அக்கா பிரியதர்ஷினி, அஜர் - தர்ஷனின் ரிசப்ஷன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.