வசூலில் படுதோல்வி! சந்தானத்தின் DD Next Level படத்தின் மோசமான வசூல்

Santhanam Box office
By Kathick May 22, 2025 10:30 AM GMT
Report

ஹாரர் காமெடி என்கிற Genre-ல் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சந்தானம். தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, DD returns என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார்.

இதனாலேயே DD Next Level திரைப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்தனர். ஆனால், எதிர்பார்த்து திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கு DD Next Level படம் ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளது.

வசூலில் படுதோல்வி! சந்தானத்தின் DD Next Level படத்தின் மோசமான வசூல் | Dd Next Level Box Office Flop

கடுமையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் குறைவான வசூலை பெற்றது DD Next Level.

இந்த நிலையில் 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் DD Next Level படம் உலகளவில் வசூல் ரீதியாக படுதோல்வியை சந்தித்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். காரணம், இதுவரை உலகளவில் ரூ. 12 கோடி மட்டுமே இப்படம் வசூல் செய்துள்ளது. இது மிகவும் மோசமான வசூலாகும் என கூறப்படுகிறது.