வசூலில் அடிவாங்கும் சந்தானத்தின் DD Next Level.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா
Santhanam
Box office
By Kathick
இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி கடந்த 16ம் தேதி வெளிவந்த திரைப்படம் DD Next Level. இப்படத்தில் கீத்திகா டிவாரி கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் கவுதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது.
இதனால் வசூலும் குறைய துவங்கியது. இந்த நிலையில், DD Next Level திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இரண்டாவது நாளே வசூலில் இப்படம் குறைய துவங்கிவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.