எனக்கு அந்த சர்டிபிகேட் கொடுக்க நீ யாரு!! 2 ஆம் திருமணம் குறித்து வாய்ந்திறந்த தொகுப்பாளினி டிடி..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஆரம்பித்து காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பிரபலமாகி டாப் ஆங்கராகவும் திகழ்ந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2014ல் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து நான்கே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றார்.
அதன்பின் டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தன்னுடைய இரண்டாம் கல்யாணம் குறித்த கேள்விக்கு சரமாரியாக பதிலடித்துள்ளார் டிடி. என் கல்யாணம் என்றால் அதுவாக தெரியப்போகுது என்றும் தெரியாமல் இருக்க போகுது. திருமணம் என்பது சாதனை கிடையாது.
10 ஆண்டுகளுக்கு முன் இருந்த திருமண புரிதல் இப்போது மாறியிருக்கிறது. எல்லோரும் செய்யக்கூடிய ஒன்று என்பதெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் திருமணம் அவசியமான முக்கியம் கிடையாது. சமுகத்தால் கொண்டுவரப்பட்ட ஒன்று தான். அதுமாறி கொண்டு இருக்கிறது. யாருக்கு யாரை பிடிக்குமோ யார் சரியாக இருப்பர்களோ அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதுவும் அவங்களுக்கு எப்போ தோணுதோ அப்போதான் செய்வார்கள். என் வாழ்க்கை என்னுடைய விதி என்னுடைய விதி யாரையும் பாதிக்காது. என்னை பற்றி சோசியல் மீடியாவில் எழுதக்கூடிய விசயங்களை பற்றி நான் கவலைப்படுவது கிடையாது எப்படிப்பட்டவள் என்பதற்கு நான் சான்றிதழ் கொடுப்பேன், நீங்கள் கொடுக்க வேண்டாம் நீங்கள் யார் எனக்கு சர்ட்டிஃபிகேட் கொடுக்க என்று கேட்டுள்ளார் தொகுப்பாளினி டிடி.