ரோட்ல வெக்கமே இல்லாம நாய் போல சண்டை போடுவோம்!! பிக்பாஸ் தீபக் மனைவி ஓப்பன்..
தீபக் மனைவி சிவரஞ்சனி
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன்பின் சீரியல் நடிகராகவும் திகழ்ந்து பிரபலமானவர் தீபக். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்த தீபக், பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்தார்.
யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதுகுறித்து விஜய் டிவியை ரசிகர்கள் இணையத்தில் கண்டபடி விமர்சித்து வந்தனர்.
சண்டை
இந்நிலையில் தீபக்கின் பழைய வீடியோக்கள் அவரது பிக்பாஸ் வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
தற்போது தீபக் மனைவி சிவரஞ்சனியுடன் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், நாங்கள் ரொம்ப சண்டை போடுவோம். ரோடு என்று கூட பார்க்காமல் நாங்கள் நாய் போல் சண்டை போடுவோம்.
வீட்டில் பெரிய சண்டை நடக்கும் ஆனால் வெளியில் வந்தால் எதுவும் இல்லாதது போல் சிலர் நடிப்பார்கள், ஆனால் நாங்கள் அப்படியில்லை. சண்டை வந்தால் அப்போதே போட்டுவிட வேண்டும் என்று தீபக் மற்றும் சிவரஞ்சனி பகிர்ந்துள்ளனர்.