பெரிய தொகையை சம்பளமாக தருகிறார்கள், அது மட்டும் போதாது.. நடிகை தீபிகா படுகோன் பேச்சு
தீபிகா படுகோன்
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் தனது குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்புக்கு வருவேன் என கூறியதாக சில மாதங்களுக்கு முன் சர்ச்சைகள் எழுந்தன.
இந்த காரணத்தினால் கல்கி 2, ஸ்பிரிட் ஆகிய படங்களில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீபிகாவுக்கு ஆதரவாகவும், சில எதிரராகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோன் அளித்த பேட்டியில் தான் மிகப்பெரிய சம்பளத்தை நிராகரித்து இருப்பதாக கூறியுள்ளார். "எனக்கு பெரிய தொகையை சம்பளமாக தர முன் வருகிறார்கள். அது மட்டுமே போதும் எனவும் நினைக்கிறார்கள். அது மட்டும் போதாது. என் ரோல் உண்மையாக இருக்கிறதா.. சில நேரம் கமர்ஷியலாக பெரிதாக இல்லை என்றாலும், அந்த நபர் மீது நம்பிக்கை இருந்தால் அல்லது சொல்லவரும் கருத்து மீது நம்பிக்கை இருந்தால் நான் அதை ஏற்று கொள்வேன்".
8 மணி நேர ஷிப்ட் பற்றி பேசிய தீபிகா "அளவுக்கு அதிகமாக வேலை செய்வதை சாதாரண ஒரு விஷயம் ஆக்கிவிட்டார்கள். அதை அர்ப்பணிப்பு என சொல்கிறார்கள். ஒரு மனிதனின் உடல் மற்றும் மூளைக்கு 8 மணி நேரம் ஒரு நாள் வேலை போதுமானது" என அவர் தெரிவித்துள்ளார்.