நடுரோட்டில் படுமோசமான குத்தாட்டம் போட்ட நடிகை! இந்தியளவில் சர்ச்சையாகி வீடியோ..

CycloneTauktae deepikasingh
By Edward May 20, 2021 03:00 PM GMT
Report

கொரோனா வைரஸை தாண்டி கடந்த வாரம் அரபிக்கடலில் ஏற்பட்ட டவ்-தே புயலால் பல மாநிலங்களில் படுமோசமான சேதத்தை ஏற்படுத்தியது. கோரத்தாண்டவம் ஆடிய டவ்-தே புயல் சுமார் 175 கி.மீ வேகத்தில் வீசியதால் வீடுகள், மின் கம்பங்கள், மரங்கள் என சரிந்து விழுந்து, சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று சேதமடைந்ததை சரிசெய்து வருகிறார்கள் மீட்புக்குழுவினர். இதற்கிடையில் பாலிவுட் சினிமா நடிகை ஒருவர் பாதிப்பு நடந்த பகுதியில் கவர்ச்சியாக நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். பாலிவுட் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் நடித்து வருபவர் தீபிகா சிங்.

2014ல் திருமணமாகியும் சீரியலில் நடித்து வரும் தீபிகா சிங் டப்-தே புயலின் போது ரோட்டோரத்தில் விழுந்த மரங்களுக்கு நடுவில் குத்தாட்டம் போட்டும், போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி தீபிகா சிங்கை விமர்சித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இது தேவையா என்ன நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் சரமாரியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.