ஜாம் ஜாம்னு மகன் கல்யாணத்தை முடித்த நெப்போலியன்..மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?
நெப்போலியன்
தமிழ் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமான நடிகர் நெப்போலியன், மகன் தனுஷின் உடல் பிரச்சனைக்காக அமெரிக்காவில் சென்று செட்டிலாகினார்.
மகன் தனுஷுன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் செட்டிலாகின நெப்போலியன், சமீபத்தில் மகனுக்கு திருமணம் செய்ய திட்டார்.
அதன்படி அக்ஷயா என்ற தமிழ்நாட்டு பெண்ணை நிச்சயம் செய்து சில நாட்களுக்கு முன் ஜப்பானில் பிரம்மாண்ட முறையில் திருமணத்தை நடத்தி முடித்தார்.
மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் ஜப்பானில் திருமணம் நடைபெற்றதை அடுத்து 6 மாதம் கழித்து மீண்டும் அமெரிக்காவில் தனுஷ் - அக்ஷயா திருமணத்தை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறாராம் நெப்போலியன்.
சொத்து மதிப்பு
இந்நிலையில் நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. சாஃப்ட்வேர் கம்பெனியை நடத்தி வரும் நெப்போலியன் பெரும்பாலும் இந்தியர்கள் தான் வேலைக்கு வைத்திருக்கிறாராம்.
2000 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்காவில் விவசாயம் செய்தும் காய்கறிகளை விளைவித்தும் வருகிறார். அவரின் மொத்த சொத்தின் மதிப்பு சுமார் 1000 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
டெஸ்லா, பென்ஸ் உள்ளிட்ட கார்கள் வைத்திருக்கும் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்திற்காக 20 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.