கிளாமருக்கு ஆசைப்பட்டு மார்க்கெட் இழக்கும் நிலை!! பல்ப் வாங்கி ரூட்டை மாற்றிய தேவயானி..
Devayani
Gossip Today
By Edward
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோல் சீரியல் என நடித்து வருபவர் நடிகை தேவயானி.
தமிழ், தெலுங்கு என அடக்கவுடக்கமான குடும்ப பெண்ணாக நடித்து வந்த தேவயானி சிவசக்தி என்ற ஒரு படத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாறி நடித்தார். அப்படத்தில் ஒரு பாடலுக்கு தேவயானி கிளாமரில் ஆட்டம் ஆடியிருப்பார்.
ஆனால் அப்படம் வெற்றியடையாமல் தோல்வியை சந்தித்ததோடு தேவயானிக்கு பெரிய மார்க்கெட் இழப்பை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் சேலை, தாவணி கட்டி நடித்து கிளாமருக்கு நோ கூறி நடித்து வந்தார்.
சமீபத்தில் புதுபுது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வந்த தேவயானி கடந்த மாதம் அந்த தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. மீண்டும் சீரியலில் நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் காத்தும் வருகிறார்கள்.