கோடியில் புரளும் நடிகை தேவயானி!! சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தேவயானி ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர். அஜித், விஜய் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து அசத்தியவர். பட வாய்ப்புகள் குறைய சின்னத்திரை பக்கம் வந்தவர் கோலங்கள், புது புது அர்த்தங்கள் என தொடர்கள் நடித்து வந்தார்.
அண்மையில் தான் புது புது அர்த்தங்கள் தொடரும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஒரு பேட்டியில், அவர், வெயில் காலத்தில் எங்களது பண்ணை வீட்டில் குளிர்ச்சியாக இருக்க ஒரு விஷயம் செய்துள்ளோம்.
சுவிட்ச் போட்டால் நடு வீட்டில் மழை வருவது போல் செட்டப் உள்ளது. இந்நிலையில் நடிகை தேவயானியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர் (82 கோடி ரூபாய்) என்று கூறப்படுகிறது.
அதிலும் சென்னையில் ஒரு பிரம்மாண்ட வீடு, ஈரோடு அந்தியூரில் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு என்று தேவயானி குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.