எதுக்கும் வருந்தவேண்டாம்.. இது ஒரு பாடம்!! கங்குவா டீமுக்கு அட்வைஸ் செய்த தயாரிப்பாளர்
கங்குவா
நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் கங்குவா.
அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இப்படியொரு சூழலில் படம் ரிலீஸ் செய்வதில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குழப்பம் ஏற்படுத்தி வருவது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
இதுவரை கங்குவா படம் 400 கோடிக்கு மேல் பிசினஸ் செய்திருப்பதாகவும் அக்டோபர் 10 ஆம்தேதி ரிலிஸ் ஆகும் என்று அறிவித்தனர். ஆனால் அன்றைய தினத்தன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்தனர்.
ரஜினியுடன் மோதுவது சரியாக இருக்குமா என்ற எண்ணம் முதலில் படக்குழுவினருக்கு தோன்றியதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தானுவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்
தற்போது தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் எக்ஸ் தள பக்கத்தில், உங்கள் வாழ்க்கையில் நடந்த எதற்கும் வருத்தப்பட வேண்டாம். அதை மாற்றவோ தவிர்க்கவோ மறக்கவோ முடியாது. எனவே இதை கற்றுக்கொண்ட பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இவர் இப்படி கூறியது கங்குவா பட நடிகர் சூர்யாவுக்கு அட்வைஸ் செய்கிறாரா? இல்லை வேட்டையன் படத்துடன் மோதுவரை தவிர்க்க வேண்டாம் என்றும் தவித்தாலும் அதற்கு வருத்தப்பட வேண்டாம் என்று வார்னிங் -ஆக சூசகமாக கூறுகிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Happy Morning friends ? pic.twitter.com/Qtev1yUckr
— G Dhananjeyan (@Dhananjayang) August 27, 2024