தனுஷ், அஜித்-னா ஓகே விஜய்-ஆ வேண்டாம்!! 30 ஆண்டுகளாக தளபதியை ஒதுக்கி வரும் 53 வயது நடிகை..
சினிமாவில் ஒரு சில மூத்த நடிகைகள் முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பல நடிகர்கள் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருவார்கள். அப்படி மிழ் சினிமாவின் அம்மா என்று அழைக்கப்படுபவர் தான் சரண்யா பொன்வண்ணன்.
கமல் ஹாசனின் நாயகன் படத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார். ராம் படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானார்.
அதிலிருந்து தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரம் என்றால் அவரை தான் கமிட் செய்வார்கள். அப்படியொரு நடிப்பை காட்டி அசத்தியவர். அஜித்குமார், ஜீவா, விஷ்ணு விஷால், கதிர், சூர்யா, கார்த்தி, தனுஷ், மாதவன், உதயநிதி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அம்மாவாக நடித்துள்ளார்.
ஆனால் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்ததில்லை. சிவகாசி, குருவி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் விஜய்க்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்ததில்லை.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்றும் அது கூடிய சீக்கிரம் நடக்கும் என்றும் விஜய் ஒரு நிகழ்ச்சியில் கூட என்னிடம் கூறினார் என கூறியிருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
