விவாகத்து முடிவுக்கு நோ? 3வது முறையாக நீதிமன்றத்துக்கு டிமிக்கி கொடுக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
விவாகரத்து
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவாழப்போவதாக அறிக்கை வெளியிட்டு விவாகரத்து தகவலை வெளியிட்டனர்.
18 வருட திருமண வாழ்க்கையில் யாத்ரா,லிங்கா என்ற மகன்கள் இருக்கையில் தங்கள் விவாகரத்தை அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தனர். இருவரின் வீட்டாரும் சமாதானம் செய்தும் இருவரும் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
ஏப்ரல் மாதம் மனுத்தாக்கல் செய்தநிலையில், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை.
மூன்றாவது முறை
இதன்பின் 19 ஆம் தேதியும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று நவம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வழக்கு வந்தபோதும் மூன்றாவது முறையாக தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதிலிருந்து இருவரும் விவாகரத்து செய்ய விருப்பம் இல்லை என்பதால் ஆஜராஜவில்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.