பிரச்சனை ஒரு பக்கம்..ஒரே திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா!! வைரலாகும் வீடியோ..
தனுஷ் - நயன்தாரா
அண்மையில் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருமண ஆவணப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தனது திருமண வீடியோவிற்காக நெட்பிலிக்ஸ் குழுவிடம் இருந்து நயன்தாரா ரூ. 20 முதல் ரூ. 30 கோடி வரை பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சி 3 நொடி இருந்ததால் தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதனால் கோபத்தில் நயன் தாரா தனுஷை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தயாரிப்பாளர் ஆகாஷ்
இந்த விவகாரம் பெரியளவில் புகைத்து வந்த நிலையில் இன்று நவம்பர் 21 ஆம் தேதி தனுஷ் தன்னுடைய விவாகரத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகி, விவாகரத்து வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, தனுஷ் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அதே திருமணத்தில் நடிகை நயன் தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனுடனும் கலந்து கொண்டிருக்கிறார். தனுஷ் - நயன் கலந்து கொண்டாலும் இருவரும் முகத்தை பார்த்துக்கொள்ளாமல் வேறு வேறு பக்கமாக உட்கார்ந்துள்ளனர்.
தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்திற்கு சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, அனிரூத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Dhanush and #Nayanthara Spotted in same hall..🤯🔥
— Tharani ᖇᵗк (@iam_Tharani) November 21, 2024
pic.twitter.com/rOw4xC3Ger