அந்த பொண்ணு மேல தனுஷுக்கு இப்படியொரு கோபமா? விவாகரத்துக்கு பின் இப்படி மாறிட்டாரே?

Dhanush Selvaraghavan Naane Varuven
By Edward Jun 14, 2022 01:20 PM GMT
Report

மாறன் படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகவுள்ளது. மேலும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படமும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பிறகு தன் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் புகைப்படங்களும் வெளியாகியது. செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய சாணி காயிதம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய யாமினி தான் நானே வருவேன் படத்திலும் பணியாற்ற இருக்கிறாராம்.

ஏற்கனவே இருவருக்கும் சண்டை என்று யாமினி படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு முழுக்க காரணமெ தனுஷ் என்று கூறப்படுகிறது. செல்வராகவன் தான் நானே வருவேன் படத்தில் யாமினியை நியமித்தார். ஆனால் படம் ஆரம்பித்த சில நாட்களில் தனுஷுடன் செல்வராகவன் சண்டை போட்டதால் யாமினி விலகி இருக்கிறார்.

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதால் இப்படத்திலும் ஒளிப்பாதிவாளர் யாமினியை அருண் மாதேஸ்வரம் பணியமர்த்தி இருக்கிறாராம்.

இந்த செய்தியை கேட்ட தனுஷ் தலைக்கேறிய கோபத்தில் இப்படத்திலிருந்தும் யாமினியை தூக்க பல முயற்சிகளை செய்து வருகிறாராம். அப்படி அந்த பெண் என்ன தான் செய்தாங்க தனுஷுடன் என்று குழம்பி வருகிறார்களாம் படக்குழுவினர்.