விவாகரத்தான மனைவிக்கு செக் வைக்கும் தனுஷ்.. ஆரம்பிக்கும் புதிய பிரச்சனை
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதன் பின்னர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சினிமாவில் கவனம் செலுத்து வருகின்றனர்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதையடுத்து இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷுனு விஷால் வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியானது.
தனுஷ் vs ஐஸ்வர்யா
இந்நிலையில் இப்படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகுவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதால் படத்தில் இருந்து பல பேர் விலகியதாக தகவல் வெளியானது.
தற்போது விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் இருந்து விலகி, நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறாராம். இதனால் ஐஸ்வர்யாவிற்கு போட்டியாக தனுஷ் களமிறங்கியுள்ளார் என கூறுகின்றனர்.