தனுஷுக்கு எல்லாமே இவங்க தானாம்!! வாத்தி பட நிகழ்ச்சியில் வந்த இளம் பெண்ணின் புகைப்படம்..
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பெற்று வருபவர் நடிகர் தனுஷ்.
அவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களுக்கு பின் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவான வாத்தி (Sir) படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், ஒரு இளம் பெண் தனுஷின் சகோதரி பக்கத்தில் உட்கார்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகை தான் என்று பலர் கருத்துக்களை கூறி வந்த நிலையில், தனக்கு தனக்கு வலது கை இடது கையுமாக இருக்கும் நபர்களை ஆடியோ நிகழ்ச்சியின் மேடைக்கு அழைத்தார்.
அப்போது காவியா என்ற பெயரை கூப்பிட்டு அவர் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


