விஜய்யின் பீஸ்ட் படத்தில் தனுஷ்! நடிக்காமல் இதற்கு மட்டும் ஓகேவாம்..

vijay dhanush nelsondilipkumar beast
By Edward Sep 07, 2021 03:00 PM GMT
Edward

Edward

Report

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கதில் மாஸ்டர் படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவும் வில்லனாக இயக்குநர் செல்வராகவனும் கமிட்டாஅகி படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இப்படி சென்று கொண்டிருக்கும் போது தளபதி 66 படத்தின் இயக்குநர் மிஸ்மி இயக்கவுள்ளார் என்ற செய்தியை வெளியிட்டனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. நடிப்பதற்கு கிடையாதாம். ஒரு பாடலை எழுதி அவரே பாடவுள்ளாராம்.

சாதாரணமாகவே தனுஷ் பாடுவதிலும் பாடலை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். அதிலும் தற்போது விஜய் படத்திற்கு எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.