இன்னும் எதுவுமே குறையல!! இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா.. ஒரே லைக்-ஆல் எழுந்த கேள்வி..
Dhanush
Aishwarya Rajinikanth
Gossip Today
By Jai
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், நடிப்பை தாண்டி தற்போது இயக்கத்திலும் அதிக ஈடுபாடு கொடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற அடுத்த படத்தினையும் இயக்கி முடித்திருக்கிறார்.
இதற்கிடையில் தன் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வரும் தனுஷ், சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிரா பக்கத்தில் தன் மகன்களுடன் எடுத்த புகைப்படங்களையும் தன்னுடைய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அந்த பதிவினை தனுஷ் லைக் செய்திருக்கிறார்.
இதனை கவனித்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்றும் இன்னும் தனுஷுக்கு ஐஸ்வர்யா மீது அக்கரை இருக்கிறது என்றும் பாசமும் குறையவில்லை போல என்று கருத்துக்களை கூறி இருவரும் இணையவும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.
