சிம்பு பட நடிகையை தட்டிதூக்கிய தனுஷ்.. பிரியங்கா மோகனை தொடர்ந்து இவருமா
Dhanush
Silambarasan
By Kathick
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், பிரியங்கா மோகனை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகையை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க தட்டிதூக்கியுள்ளாராம்.
அவர் வேறு யாருமில்லை அண்மையில் வெளிவந்த வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இதானி தான். ஆம், நடிகை சித்தி இதானி தான் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போகிறாராம்.