நயன்தாரா அதுக்காக எந்த எல்லைக்கும் போவாங்க!! ரகசியத்தை உடைத்த விவாகரத்தான நடிகர்
தென்னிந்திய சினிமாவில் டாப்நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது மண்ணாங்கட்டி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன் தாரா, தன் கணவர் விக்னேஷ் சிவனுடனும், இரட்டை குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இதற்கிடையில் பல தொழில்களை ஆரம்பித்து காசு சம்பாதித்து வரும் நயன் தாரா, கணவருடன் கவர்ச்சி ஆடையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில் பிரபலங்கள் நடிகை நயன் தாராவை பற்றி தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அப்படி சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷ் பேட்டியொன்றில் நயன் தாரா பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷுடன் கொடுத்த அந்த பேட்டியில் தொகுப்பாளினி டிடி நயன்தாராவை பற்றி கேட்டிருந்தார்.
அதற்கு தனுஷ், நயன் தாரா ஒருத்தரோட பழகும் போது அவங்கள பிடிச்சிடுச்சுன்னா, நண்பராகிவிட்டார் என்றால் அவங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க, அது என்ன வேணாலும் பண்ணுவாங்க, அது என்ன வேணாலும் இருக்கட்டும், எந்த எல்லைக்கும் போவாங்க என்று நடிகர் தனுஷ் ஓப்பனாக பேசியிருக்கிறார்.