விவாகரத்துக்கு பின் எட்டிய உச்சம்!! உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த தனுஷ், சமந்தா
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். இவரெல்லாம் ஒரு நடிகராக என்று தனுஷை ஆரம்பத்தில் கிண்டல் செய்தவர்கள் தற்போது வரிசைக்கட்டி வாய்ப்பு கேட்கும் அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளார் தனுஷ்.

சமந்தா
அவரை போலவே தென்னிந்திய முன்னணி நடிகையாக இருந்து விவாகரத்து, அரியவகை நோய் என பல பிரச்சனைகளை சந்தித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் புஷ்பா படத்தினை அடுத்து சமந்தாவின் மார்க்கெட் அதிகரித்ததால் பாலிவுட் படத்தில் நடிக்கவும் இருக்கிறார்.
இப்படி தனுஷ், சமந்தா இருவரும் விவாகரத்துக்கு பின் தங்களுக்கென தனி அங்கீகாரத்தை பெற்று கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல ஊடகமான IMDb நடத்திய Top 10 Most Popular Indian Stars of the year என்ற வரிசை பட்டியலை விடுவித்துள்ளது.

5 தென்னிந்திய நடிகர்கள்
அதில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ் தான். பாலிவுட் நடிகர் நடிகைகளையே ஓரங்கட்டி தனுஷ் இந்த இடத்தினை பிடித்திருக்கிறார். அவரை தொடர்ந்து ஆலியா பட் 2ஆம் இடம், ஐஸ்வர்யா ராய் 3 ஆம் இடம், ராம் சரண் 4 ஆம் இடம் என பிடித்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து நடிகை சமந்தா 5 ஆம் இடத்தினை பிடித்துள்ளாரார். இந்த லிஸ்ட்டில் டாப் பாலிவுட் நடிகைகளாக தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைஃப் கூட இடம்பிடிக்காதது தான் அதிர்ச்சி என பாலிவுட் வட்டாரத்தில் புலம்பி வருகிறார்கள். டாப் பத்தில் 5 தென்னிந்திய நடிகர்கள் இடம்பிடித்துள்ளனர்.
Aaaand we have arrived at the moment we’ve all been waiting for ? Presenting the IMDb Top 10 Most Popular Indian Stars of the year ?
— IMDb India (@IMDb_in) December 7, 2022
Who was your favourite Indian star this year? ?⭐️ #IMDbBestof2022 pic.twitter.com/w6deLsCZ9y