34 வயது பாலிவுட் நடிகையுடன் இணையும் தனுஷ்.. யார் அந்த நடிகை தெரியுமா
Dhanush
Kriti Sanon
By Karthick Raja
உலகளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகியுள்ளார் தனுஷ். கோலிவுட்டில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளிவந்த அம்பிகாபதி படத்தின் மூலம் தான் இந்தியில் அறிமுகமானார். இதை தொடர்ந்து மீண்டும் அவருடைய இயக்கத்திலேயே அத்ராங்கி ரே எனும் படத்தில் நடித்திருந்தார்.

இரண்டு முறையும் இந்த கூட்டணி மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது Tere Ishk Mein எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் கிருத்தி சனோன் என்பது குறிப்பிடத்தக்கது.
