எனக்காக தனுஷ் அத பண்ணாரு..விஜய் டிவியிலிருந்து விலக காரணம் இதுதான்.. பலர் பேச தயங்கும் விஷயத்தை பேசிய டிடி

Dhanush Dhivyadharshini Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 18, 2023 10:20 AM GMT
Report

தொகுப்பாளர் டிடி பற்றி அறிமுகம் தேவையில்லை, அந்த அளவுக்கு பிரபலமானவர் என்றே கூறலாம். தற்போது டிடி மத்தகம் வெப் தொடர் ஒன்றும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிடி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், பல தொகுப்பாளர்கள் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.

தொகுப்பாளர் பணியை நான் மிகவும் ரசித்த செய்தேன். என் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணமும் இதுவே. அதனால் தான் விஜய் டிவியில் இருந்து விலகிவிட்டேன்.

கமல் ஹாசன், தனுஷ் போன்ற நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே எனக்கு ஒரு ஸ்டூல் தந்து அதில் நான் உட்கார்ந்து இருந்தேன். எல்லா தொகுப்பாளருக்கும் இது போன்று ஸ்டூல் கொடுத்தால் நல்ல இருக்கும் என்று டிடி.

இந்த விஷயத்தை பேச தொகுப்பாளர் பலரும் தயங்கி வந்த நிலையில் டிடி ஓபன்னாக பேசியதை பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.