ஐஸ்வர்யா - தனுஷுக்கு விவாகரத்தே ஆகவில்லை!! மகன்களுக்காக மீண்டும் சேர தூது விடுகிறார்.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..
சினிமாவில் நடக்கும் பல விசயங்களையும் நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிபட்ட வாழ்க்கைகளை பற்றி அவதூறான வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன்.
பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்த பயில்வான், தற்போது ஐஸ்வர்யா - தனுஷ் விவகாரம் பற்றி பேசியிருக்கிறார். ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து வாழ்கிறார்களே தவிர விவாகரத்துக்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.
ஏனென்றால், இதை ரஜினிகாந்த் விரும்பவில்லை என்பதால் பிரிந்து வாழ்ந்தால் பரவாயில்லை விவாகரத்து வரை செல்லவேண்டாம் என்பது ரஜினிகந்தின் நிபந்தனை. இந்த விசயத்தில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்.
யாத்ரா மற்றும் லிங்கா அம்மா மீது வைத்திருக்கும் பாசத்தை போலவே அப்பா தனுஷ் மீதும் பாசம் வைத்துள்ளார்கள் என்ற காரணம் தான். சமீபத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தனுஷ் மகன்களை அழைத்து சென்றார். அதேபோல், பொங்கல் அன்றும் தனுஷ் வீட்டிற்கு சென்று வந்தனர்.
சமீபத்தில் ஜானி மாஸ்டரை வைத்து இசை ஆல்பம் இயக்கிய ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் லால் சலாம் படத்தின் வெற்றிக்காகவும் வாழ்த்து தெரிவித்தார் தனுஷ். தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ தூதுவிடுகிறார் தனுஷ். ஆனால் ஐஸ்வர்யாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, வரலாம், வரவேண்டும் என்று கூறிருக்கிறார் பயில்வான்.
You May Like This Video