முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைத்தாரா நடிகை ராஷ்மிகா மந்தனா..

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kathick Feb 22, 2026 03:30 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா வருகிற 26ஆம் தேதி நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக உதய்பூரில் நடக்கிறது.

அந்த திருமணத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தை பணியமர்த்தி இருக்கிறார்களாம்.

முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைத்தாரா நடிகை ராஷ்மிகா மந்தனா.. | Did Rashmika Invites Her Ex Lover To Her Marriage

கடந்த 2017ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவருடன் நடிகை ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நின்றுபோனது. இந்த நிலையில், தனது திருமணத்திற்கு முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டியை அழைத்தாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ரக்ஷித் ஷெட்டியின் நண்பர் பிரமோத் ஷெட்டி அளித்த பேட்டியில், "ராஷ்மிகா எங்களை எல்லாம் அழைக்க மாட்டார். ரக்ஷித் ஷெட்டி இதற்காக உட்கார்ந்து அழ ஒன்றும் சின்ன குழந்தை கிடையாது" என கூறியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைத்தாரா நடிகை ராஷ்மிகா மந்தனா.. | Did Rashmika Invites Her Ex Lover To Her Marriage