இதெல்லாம் தேவையா கோபால்? ரெட் கார்ட்டில் சிக்கிய லக்னோ வீரர் திக்வேஷ் ரதி..
லக்னோ - ஹைதராபாத்
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் போர் நிறுத்தப்பட்டப்பின் கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் துவங்கியது. மே 19 ஆம் தேதி நடந்த லக்னோ - ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதால் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
லக்னோ - ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது லக்னோ வீரர் திக்வேஷ் ரதிக்கும் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவுக்கும் இடையே ஆக்ரோஷமான வார்த்தை மோதல் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்களின் செயல் பலரது கண்டனத்தை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக போட்டியொல் சர்ச்சையில் சிக்கிய திக்வேஷ் ரசிக்கு ஒழுங்கு நடவடிக்கையாக அவரை ஒரு போட்டியில் இருந்து நீக்க் ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் நிர்வாகம்
ஐபிஎல் குழு வெளியிட்ட அறிக்கையில், லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மே 19ல் நடந்த ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியொல் திக்வேஷ் ரதியின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் பிரிவு 2.5-ன் கீழ் அவராது மூன்றாவது லெவல் 1 குற்றம் என்பதால் அவர் மேலும் இரு டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ளார். ஏற்கனவே பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேனா போட்டியில் இரு டிமெரிட் புள்ளிகளை பெற்றார்.
இப்போது ஒரே சீசனில் 5 டிமெரிட் புள்ளிகள் பெற்று ஒரு வீரர் ஒரு ஆட்டத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நிக்வேஷ் ரதி இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு அவரது போட்டிக்கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்தும் பிரிவு 2.6ன் படி முதல் லெவல் 1 குற்றம் என்பதால் அவர் ஒரு டிமெரிட் புள்ளியை பெற்றுள்ளார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
