பிக் பாஸ்க்கு பின்னரும் தினேஷ் - விசித்ரா இடையே கடும் மோதல்.. அண்டாகாகசம் செட்டில் வெடித்த பிரச்சனை
பிக் பாஸ் சீசன் 7 ல் விதிமுறைகள் மட்டுமின்றி போட்டியாளர்களும் சற்று வித்தியாசமாக தான் இருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் தினேஷ் - விசித்ரா எதிரும் புதிருமா அடிக்கடி சண்டை போட்டு வந்தார்கள், சரி பிக் பாஸ் முடிந்த பிறகு அதை எல்லாம் மறந்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்று பார்த்தால் அப்படி இல்லை. பிக் பாஸ் பின்னரும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான அண்டா காகசம் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினேஷ் - விசித்தரா கலந்துகொண்டனர். அதில் இரண்டு டீம் விளையாடுவார்கள்.
அப்போது விசித்தரா ஒரு டீமிலும், தினேஷ் டீமிலும் போட்டுள்ளனர். அதற்கு விசித்ரா தினேஷ் என்னுடைய டீம்மில் தான் இருக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸில் என் தனிப்பட்ட வாழ்க்கையை ரொம்ப மோசமாக பேசினார்கள். இப்போது அவருடன் சேர்ந்து ஒரே டீமில் இருப்பது சரிப்பட்டு வராது என்று தினேஷ் சொல்லி இருக்கிறார்.
அதன் பின்னர் விசித்ரா நிகழ்ச்சி தயாரிக்கும் டீம் உடன் சண்டை போட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டார் என்று தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.