மும்பையில் குடும்பத்தோடு செட்டில்!! இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Atlee Kumar Jawan Tamil Directors Net worth
By Edward Sep 21, 2024 09:45 AM GMT
Edward

Edward

Report

அட்லீ குமார்

இயக்குநர் சங்கருடன் உதவி இயக்குநராக பணியாற்றி ராஜா ராணி என்ற வெற்றிப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார் இயக்குநர் அட்லீ குமார். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

மும்பையில் குடும்பத்தோடு செட்டில்!! இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு இவ்வளவா? | Director Atlee Celebrate 38Th Birthday Net Worth

இப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் காப்பி இயக்குநர் என்ற பெயரையும் எடுத்து விமர்சனத்திற்குள்ளாகினார். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்கி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார்.

இதனால் அட்லீயின் மார்க்கெட் பாலிவுட் சினிமாவில் அதிகரிக்க அடுத்து சல்மானை வைத்து படம் இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லீ சமீபத்தில் ஆண் மகனை பெற்றெடுத்தார்.

மும்பையில் குடும்பத்தோடு செட்டில்!! இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு இவ்வளவா? | Director Atlee Celebrate 38Th Birthday Net Worth

சொத்து மதிப்பு

மும்பையில் மனைவி, குழந்தையுடன் செட்டிலாகி வசித்து வரும் அட்லீ இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அட்லீ ஒரு படத்தில் 30 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். ஜவான் படத்தில்தான் அவருக்கு 30 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அட்லீ குமாரின் மொத்த சொத்து மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 42 கோடிகள் வரை அட்லீயின் சொத்து மதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.