தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள்! தமிழக முதலமைச்சருக்கு இதைதான் கூறினாரா இயக்குநர் பாலா!

mkstalin director bala chef minister of tamilnadu
By Edward May 09, 2021 06:15 PM GMT
Report

தமிழக முதலமைச்சராக முதன் முதலில் அறியணையை அலங்கரித்துள்ளார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். தந்தைக்கு பிறகு பல வருடங்களுக்கு பின் ஆடியை 159 தொகுதிகளுடன் இடம்பிடித்து முதல்வர் ஆகியுள்ளார்.

முதலமைச்சாரான சில மணி நேரங்களிலேயே மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு ஆரம்பித்தார். இதற்கிடையில் சில அறிவிப்புகளை அறித்து வரும் மு.க ஸ்டாலின் அவர்கள் ’தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள்’ என்று தமிழக மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கு காரணங்கள் முதலமைச்சர் கூறியிருந்தார். இதற்கு ஆதரவாக கருத்துக்களை இணையத்தில் கூறி வருகிறார்கள் தமிழக மக்கள். இந்நிலையில், எப்போது டிவிட்டர் பக்கம் வராத இயக்குநர் பாலா இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’

தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள்’ என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதைத்தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்ரும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம் நன்றி என்று கூறி,

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோனாக்கி வாழுங் குடி.

என்ற திருக்குறளை கூறியும் வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.