சூர்யாவை நம்பினால் 20 ஆண்டு சினிமாவே கைமீறி போய்டும்! ரூட்டை மாற்றிய இயக்குனர்
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர் பலர் இருந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள். அப்படி தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் ஹரி.
இதையடுத்து நடிகர் விக்ரமின் சாமி மற்றும் அருள், சிம்புவின் கோவில், சூர்யாவின் ஆறு, வேல், சிங்கம் 1, 2,3 போன்ற பாகங்களை எடுத்து ஹிட் கொடுத்தார். அதன்பின் பூஜை, சாமி 2 உள்ளிட்ட படங்களை எடுத்து வந்தார்.
இடையில் சில ஆண்டுகளாக எந்த முன்னணி நடிகர்களும் ஏன் சூர்யா கூட ஹரிக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி வருகிறார்களாம். இதை கண்டு பயப்படாமல் நடிகர் அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தினை எடுத்து முடித்துள்ளார்.
சில காரணங்களால் இப்படம் வெளியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அது சரியாக சில மாதங்கள் எடுக்கும் என்பதால் முன்னணி நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இப்படியொரு சூழ்நிலையில் இயக்குனர் ஹரி ஒரு முடிவெடுத்துள்ளாராம். சங்கர், அட்லீ போன்ற இயக்குனர்களை போன்று மற்ற மொழி நடிகர்களை வைத்து படத்தினை எடுக்க ரூட்டை போட்டுள்ளார்.
அதன் முதற்படியாக ஜெயம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த நடிகர் கோபிசந்த்-ஐ வைத்து படம் எடுக்கவுள்ளாராம்.