அந்த ஹீரோ நடிகைகளின் உடலை வச்சி பெரிய இடத்துக்கு வந்தாங்க!! பரபரப்பை கிளப்பும் பிரபல இயக்குனர்
அ.தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டார்கள் என்றும் அதில் திரிஷாவின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு திரிஷா கடும் கண்டம் தெரிவித்து, ஏ.வி.ராஜுவை மன்னிப்பு தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குனர் லெனின், ஏன் திரிஷாவிற்கு எந்த ஒரு முன்னணி நட்சத்திரமும் ஆதரவு தரவில்லை? என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள், நாட்டை ஆளவேண்டும் என துடிக்கும் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் பெண்ணின் உடலை வைத்து தான் இன்று உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளனர். நான் சிறுவயதில் ரஜினி படமாக இருந்தாலும், கமல் படமாக இருந்தாலும் நடிகை சில்க் ஸ்மிதாவின் உடலை மையமாக வைத்து தான் போஸ்டர் இருக்கும்.
இதை பார்த்து தான் நான் வளர்ந்தேன். இப்படி ஆணாதிக்கம் நிறைந்த நடிகர்கள், பெண்கள் பிரச்சனை குறித்து கேள்வி கேட்கமாட்டார்கள். இப்போது கூட திரிஷாவுக்கு ஆதரவாக கொடுக்கவில்லை என்று இயக்குனர் லெனின் பேசியுள்ளார்.