சமந்தா அழுதால் நானும் அழுவேன்.. மேடையில் உடைத்த இயக்குநர்
Samantha
Tamil Cinema
Sudha Kongara
By Bhavya
சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் சமந்தா கலந்துகொண்டார்.
உடைத்த இயக்குநர்
அந்த விழாவில் இயக்குநர் சுதா கொங்கரா நடிகை சமந்தா குறித்து மேடையில் பேசிய விஷயம் ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "நான் சமந்தாவின் மிகப்பெரிய ரசிகை. கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் Touch-ல் இருக்கிறேன். அவர் அழுதால் நானும் அழுவேன்.
சமந்தா எதிர்த்து போராடும் விதம் எனக்கு பலம் தருகிறது. அவர் ஒரு இன்ஸ்பிரேஷன், எனக்கு சமந்தாவின் ஊ அண்ட்டாவா பாடல் மிகவும் பிடிக்கும்" என கூறியுள்ளார்.