பிரபல இயக்குநரின் இரண்டாம் திருமணம் விவாகரத்தில் முடிகிறது? டிவிட்டை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா? என்ற கேள்விகளை எழுப்பிய ஒல்லி நடிகரை தன் படத்தில் கொடிக்கட்டி பறக்கவிட்டவர் அந்த இயக்குநர். தம்பியுடன் நடித்த நடிகையை முதல் திருமணம் செய்து கொண்டு சில காரணங்களால் விவாகரத்தும் பெற்றார்.
இதையடுத்து ஆயிரத்தில் ஒருவனாக அமைந்து தன்னைத்தானெ உயர்த்தி கொண்டார் அந்த இயக்குநர். படங்களை இயக்குவதில் நல்ல வரவேற்பை பெற்ற அவர் இரண்டாம் திருமணத்தை அஞ்சலி பெயர் கொண்டவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குழந்தையை பெற்றபின் விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வளம் வந்தனர். இந்நிலையில் இயக்குநரின் படங்களில் கூறும் கருத்துக்கள் மறைமுகமாக இருக்கும்.
அப்படியாக டிவிட்டர் பக்கத்தில் தனிமையில் இருப்பது நிம்மதி என்ற கருத்தினை கூறி ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளார். இன்னொரு துணை இருந்தால் நிம்மதி என்று நினைத்து விடாதே என்றும் நீ மட்டும் தான் துணை என்று சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் அவர் இயக்கிய படத்தின் பாடலில் வரும் வரிகள் என்றும் இதை பார்த்து ரெண்டாவது விவாகரத்தா என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.