அதெல்லாம் உங்க அப்பா முன்னாடி பண்ணுங்க.. விஜய்யை மோசமாக திட்டித்தீற்கும் பிரபல இயக்குனர்

Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 27, 2023 06:30 AM GMT
Report

கடந்த ஜனவரி மாதம் நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் வெளியானது. இதில் சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரகாஷ் ராஜ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தனர்.

அதெல்லாம் உங்க அப்பா முன்னாடி பண்ணுங்க.. விஜய்யை மோசமாக திட்டித்தீற்கும் பிரபல இயக்குனர் | Director Rajakumaran Badly Speak About Vijay

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் ராஜகுமாரன், சமீபத்தில் வாரிசு படம் பார்த்தேன். அந்த படத்தில் சரத்குமார் மட்டுமே நன்றாக நடித்திருந்தார். மற்றவர்கள் எல்லாம் சரியாக நடிக்கவில்லை.

அந்த படத்தில் விஜய் அப்பா முன்னாடி ஆணவமாக நடித்திருந்தார். நீங்க உங்க அப்பா முன்னாடி இதெல்லாம் பண்ணுங்க ஆனால் திரையில் இது போன்று செய்யாதீர்கள் என்று விஜய்யை தாக்கி பேசியிருந்தார்.