இயக்குநர் சங்கரின் இத்தனை கோடி மதிப்பிலான வீட்டை பார்த்திருக்கிறீர்களா! இதுதான் பிரம்மாண்டம்..
director
shankar
indian2
tamilcinema
By Edward
தமிழ் சினிமாவில் உச்ச இயக்குநர் என்றும் பிரம்மாண்ட இயக்குநர் என்றும் பேர் பெற்றவர் இயக்குநர் சங்கர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பித்து விபத்தால் பாதியில் நின்றது. பின் கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு தொடரமுடியாமல் அப்படியே இருக்கிறது.
இதையடுத்து சங்கர் தெலுங்கு பக்கம் சென்று ராம் சரணுடன் இணைந்து படத்தினை எடுக்கவுள்ளார். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை கமிட் செய்துள்ளார்.
சமீபத்தில் அவரது மகள் திருமணம் சாதாரண முறையில் முக ஸ்டாலின் ஆசியுடன் நடைபெற்றது. இந்நிலையில் இயக்குநர் சங்கரின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



