அஜித்தின் குப்பை கதைக்காக கெஞ்சிய ரஜினிகாந்த்!! ஆணவத்தில் சூப்பர் ஸ்டாரிடம் மொக்கை வாங்கிய இயக்குனர்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் தன்னை கவர்ந்தால் அவர்களை உடனே சந்தித்தோ அல்லது கால் செய்தோ பாராட்டும் பழக்கத்தை வைத்து வருகிறார். ஆனால் இது ரஜினிகாந்துக்கு ஏற்கனவே இருக்கும் பழக்கம் தானாம்.

அப்படி இயக்குனர் லிங்குசாமி இயக்கி மாதவன் நடித்து சூப்பர் ஹிட்டான ரன் படத்தினை ரஜினிகாந்த் பார்த்து உடனே லிங்குசாமியை அழைத்துள்ளார். அப்போது தனது அடுத்த படத்தின் கதையை ரஜினிகாந்திடம், லிங்குசாமி கூறியிருக்கிறார்.
உடனே சூப்பர் ஸ்டார் இப்படத்தில் நானே நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், முடியாது அது கல்லூரி மாணவராக உங்களுக்கு செட்டாகாது என்று கூறியிருக்கிறார். கல்லூரி மாணவன் என்பதை ஏதேனும் பணி புரிவது போல் கதையை மாற்றிகொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அதற்கு மறுத்த லிங்குசாமி, அஜித் குமார் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளார், உங்களுக்கு செட்டாகாது என்று மீண்டும் கூறி கிளம்பி இருக்கிறார். அதன்பின் அந்த கதை ஜி என்ற படமாக வெளியாகி மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.
இப்படி ரஜினிகாந்த் கதையை மாற்றக்கூறியும் மாற்றாமல் மொக்கை வாங்கியிருக்கிறார் லிங்குசாமி. ஒருவேலை ரஜினி சொல்லியது போல் கதையை மாற்றியிருந்தால் நல்ல வரவேற்பு பெற்று லிங்குசாமியின் கேரியரே மாறியிருந்திருக்கும்.