தலைக்கணத்தில் ஆடிய இளையராஜா ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்.. வீம்பாய் நின்ற இசைஞானி..

A R Rahman Deva Ilayaraaja S P Balasubrahmanyam
By Edward Aug 10, 2022 06:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் மூத்த இசையமைப்பாளராக 70, 80களில் தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டி வந்தவர் இசைஞானி இளையராஜா. அதிலும் 80களில் எந்த படம் வெளியாகினாலும் இவர் இசை இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு இளையராஜாவின் மார்க்கெட்டுக்கும் இசைக்கும் டிமாண்ட் தான்.

அப்படி இருக்கும் போது இளையராஜாவை விட்டு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் அவரைவிட்டு விலக ஆரம்பித்தனர். அதற்கு காரணம் இளையராஜாவின் தலைக்கணமும், ஆணவத்தில் பேசும் பேச்சும் தான். அதிலும் சம்பளத்தை உயர்த்தியது மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

தனிப்பட்ட காரணங்களால் எஸ்பிபி, கே பாலச்சந்தர், பாக்யராஜ், வைரமுத்து, கங்கை அமரன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் சென்றாலும் சம்பளம் அதிகமாக வாங்குகிறார் என்று சங்கிலி முருகன், ஆர்கே, செல்வமணி, ஆர்வி உதயகுமார் உட்பட்ட பிரபலங்கள் அவரைவிட்டு விலகி வேறொரு இசையமைப்பாளர்களை நோக்கி சென்றனர்.

தனக்காக வாய்ப்பினை நான் கேட்க மாட்டேன் என்ற தலைக்கணத்தில் இருந்த இளையராஜாவுக்கு தன்னை தேடி வருவோருக்கு மட்டுமே இசையை வழங்கினார். அதற்கு கிடையில் தேவா, ஏ ஆர் ரகுமானின் ஆட்சி ஆரம்பிக்க போகபோக இளையராஜாவை தேடுவோர் குறைந்தனர்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத இசைஞானி வீம்பாய் நின்று கச்சேரி மூலமும் தன் பாடல்களின் ராயல்டிகளால் சம்பாதித்தும் வருகிறார்.