குடிக்கு அடிமை..ஒருவேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்..டிஸ்கோ சாந்தியின் மறுக்கபக்கம் இதுதான்..

Tamil Actress Actress
By Edward Nov 02, 2024 10:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

டிஸ்கோ சாந்தி

தென்னிந்திய சினிமாவில் 80களில் ஐட்டம் பாடலுக்கென்றே பெயர் போன நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. பிரபல பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகளான சாந்தி 7 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கி, ஐட்டம் பாடல்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்தது.

குடிக்கு அடிமை..ஒருவேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்..டிஸ்கோ சாந்தியின் மறுக்கபக்கம் இதுதான்.. | Disco Shanthi Emotional About Late Husband Srihari

1996ல் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து நடிப்பில் இருந்துவிலகி ஹைதராபாத்தில் செட்டிலானார். அக்ஷரா என்ற மகளும், ஷஷாங்க், மேகம்ஷ் என்ற மகனுக்கும் இருக்கும் டிஸ்கோ சாந்தியின் கணவர் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

மன அழுத்தத்தால் தினமும் குடித்தேன் என்று கணவரின் மறைவுக்கு பின் தான் குடிக்கு அடிமையாகிதாகவும் வாழவே பிடிக்கவில்லை என்று கூறினார் சாந்தி.

குடிக்கு அடிமை..ஒருவேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்..டிஸ்கோ சாந்தியின் மறுக்கபக்கம் இதுதான்.. | Disco Shanthi Emotional About Late Husband Srihari

குடிக்கு அடிமை

கணவர் மறைவு என்னை மனதளவில் மிகவும் பாதித்ததால் படுத்தால் தூக்கமே வராது என்பதால் தினமும் குடித்துவிட்டுத்தான் தூங்குவேன் என்றும் அவர் உயிரோடு இல்லாததை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

என் கணவர் இறந்தபோது அவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய்தான் இருந்தது. என் வீட்டு செலவுக்கு, ஒருவேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். இதனால் இரண்டு மூன்று இடத்தைக்கூட விற்றுவிட்டேன்.

குடிக்கு அடிமை..ஒருவேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்..டிஸ்கோ சாந்தியின் மறுக்கபக்கம் இதுதான்.. | Disco Shanthi Emotional About Late Husband Srihari

ஏனென்றால் என் குழந்தைகள் கஷ்டப்படுவதை நான் விரும்பாததால் இடத்தைவிற்றுத்தான் குடும்பம் நடத்தியதாகவும் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை.

நாங்களே கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வந்தோம். இடத்தை விற்று அந்த பணத்தை பேங்கில் போட்டு அதில் வந்த வட்டிப்பணத்தில் குடும்பத்தை கவனித்துக்கொண்டதாக டிஸ்கோ சாந்தி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.