பொலிவிழந்த என் மேனி!! மயோசிடிஸ் சிகிச்சையால் சமந்தா பட்ட அவதி.. அவரே போட்டப் பதிவு

Samantha Tamil Actress Actress
By Edward Sep 17, 2024 03:30 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. சிடெடல் படத்தினை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் 69வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியது.

பொலிவிழந்த என் மேனி!! மயோசிடிஸ் சிகிச்சையால் சமந்தா பட்ட அவதி.. அவரே போட்டப் பதிவு | Disease Made My Skin Worse Samantha Opens Up

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தார். தீவிர சிகிச்சைக்காக பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தா, மருத்துவ ஆலோசனைப்படி பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மயோசிடிஸ் பற்றிய ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். தான் நோய்வாய்ப்பட்டபோது, அதைச்சமாளிக்க சில வலுவான மருந்துகளை எடுக்க வேண்டியிருந்தது.

பொலிவிழந்த என் மேனி!! மயோசிடிஸ் சிகிச்சையால் சமந்தா பட்ட அவதி.. அவரே போட்டப் பதிவு | Disease Made My Skin Worse Samantha Opens Up

இருப்பினும் அந்த மருந்துகளால் வறட்சி, வீக்கம் மற்றும் பல பிரச்சனைகளை தனக்கு அது உருவாக்கியதால் என் தோலை பாதித்தது. மக்கள் தனது தோலைப்பற்றி அடிக்கடி கருத்து தெரிவித்தது தன்னை பாதித்தது.

மேலும் தன் சருமத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க தொடர்ச்சியாக பல வழியை தான் தேர்வு செய்ததாகவும் பிகோ லேசர், சிவப்பு விளக்கு சிகிச்சை மற்றும் நிணநீர் வடிகால்களில் கவனம் செலுத்தும் ஃபேஷியலும் செய்து வருவதால் தோல் பிரச்சனைகளை சமாளிக்க உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.