சரிகமப லிட்டில் சாப்ஸ் 4-ன் 4-வது ஃபைனலிஸ்ட்!! யார் தெரியுமா?
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4
ஜீ தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி தான். தற்போது Saregamapa Lil Champs Season 4 நிகழ்ச்சி சிறப்பாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதீத கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே போட்டி ஆரம்பமாகி ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ போன்ற மூவரும் தேர்வாகியுள்ளனர். 4 மற்றும் 5வது இடத்தினை பிடிக்க போட்டியாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். கடந்த வாரம், போட்டியாளர் திவினேஷ் சிறப்பாக பாடி நடுவர்களையும் ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தார்.
4-வது ஃபைனலிஸ்ட்
எல்லா வாரமும் தனித்துவமான சோகப்பாடல்களை பாடி அசத்திய திவினேஷ் தளபதி விஜய் நடித்து பாடிய லியோ படத்தின் விசில்போடு பாடலை பாடியிருக்கிறார். சிறப்பாக பாடிய திவினேஷை பாராட்டிய நடுவர்கள் நல்ல கமெண்ட்ஸ் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து விஜய்யை தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார். தொகுப்பாளினி விஜே அர்ச்சனா, கண்டிப்பாக மீட் செய்ய வைக்கலாம் என்று கூற, ஐயம் வைட்டிங் என்று விஜய் ஸ்டைலில் நிவினேஷ் கூறியிருக்கிறார். இந்நிலையில் சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் 4வது இறுதி சுற்றுப்போட்டியாளராக நிவினேஷ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.