முரட்டு தயாரிப்பாளரையே ஆட்டிப்படைக்கும் விவாகரத்து நடிகர்! அதுவும் இத்தனை கண்டீசனா?

Gossip Today
By Edward Jun 12, 2022 12:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்ட நடிகராக திகழ்ந்து தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். கோலிவுட், டோலிவுட் என இருந்த நடிகர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்து பெரிய உயரத்தை தாண்டியிருக்கிறார்.

அண்மையில் தான் தன் மனைவியை விவாகரத்து செய்து பல படங்களில் நடித்து வருகிறார். வெளியாக ஒருசில படங்கள் இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

விவாகரத்தால் படவாய்ப்புகள் பல கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் நடிகர் முக்கிய தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கவுள்ளதால் அந்த தயாரிப்பாளரிடம் பல கண்டீஷனை போட்டிருக்கிறார் நடிகர்.

அதாவது புதுமுக இயக்குனர்கள் வேண்டாம் என்றும் தற்போது பேசப்படும் இயக்குனர்களை குறிப்பிட்டு அவர்களை வைத்து படத்தை இயக்க வேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம்.

ஏற்கனவே அந்த தயாரிப்பாளர் சினிமாவில் கறாராக இருந்து வருபவர். அவரையே நடிகர் ஆட்டிப்படைத்து வைத்திருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.